
சகோதரியை கட்டியணைத்து அழுத வநிந்து ஹசரங்கா; வைரலாகும் காணொளி! (Image Source: Google)
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வநிந்து ஹசரங்கா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளும், 44 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளும், 55 டி20 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்த நிலையில், வணிந்து ஹசரங்கா தனது சகோதரியின் திருமணத்தின் போது கண்ணீர்விட்டு அழுத காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வணிந்து ஹசரங்கா தனது சகோதரியை கட்டியணைத்து அழுகிறார். அதே போன்று அவரது சகோதரியும் கண்ணீர் விட்டு அழும் தான் வைரலாகி வருகிறது.
Wanindu Hasaranga gets emotional at his sister's wedding. pic.twitter.com/OEuHgm7eSX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 26, 2023