
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டி (PAK vs BAN 1st Test) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியானது வெறும் 16 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து பெரும் பின்னடைவை சந்தித்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷஃபீக் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்படி பாகிஸ்தான் இன்னிங்ஸின் நான்காவது ஓவரை ஹசன் மஹ்மூத் வீச அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் அப்துல்லா ஷஃபிக் பவுண்டரி அடிக்க முயன்றார். அவர் ஆஃப்-சைட் லைனில் உள்ள இடைவெளியில் பந்தை விளையாடி ரன்கள் எடுக்க விரும்பினார், ஆனால் இங்கே அவரால் தனது ஷாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அதனாப் பந்து அப்துல்லா ஷபீக்கின் பேட்டில் பட்டதும் பந்து நேராக கல்லியை நோக்கி சென்றது. அச்சமயத்தில் அங்கு ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஜாகிர் ஹசன் பந்தை சரியாக கணித்ததுடன், அபாரமான டைவை அடித்து அற்புதமான கேட்ச்சையும் பிடித்து அசத்தினார். இவரது கேட்ச்சை பார்த்த ரசிக்ர்களும் ஒரு கணம் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இந்நிலையில் ஜாகிர் ஹசன் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலகி வருகிறது.