
WBBL: Mandhana's Ton In Vain As Harmanpreet's 81 Helps Sydney Beat Melbourne (Image Source: Google)
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான மகளிர் பிக் பேஷ் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 48ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரினிகேட்ஸ் அணி, சிட்னி தண்டர் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்துவீசியது. அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் ரினிகேட்ஸ் அணி ஹர்மன்ப்ரீத் கவுரின் அதிரடியினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 175 ரன்களைச் சேர்த்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 81 ரன்களைச் சேர்த்தார். சிட்னி அணியில் சமந்தா பேட்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.