பாபர் ஆசாம் உலக தரம் வாய்ந்த வீரர் - ஷுப்மன் கில்!
தற்போதைய கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வரும், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாபர் அசாம் விளையாட்டை பார்த்து பின் தொடர்கிறிர்களா என்ற கேள்விக்கு ஷுபமன் கில் பதிலளித்துள்ளார்.
தற்பொழுது உலகக் கிரிக்கெட்டில் இந்திய ரன் மெஷின் விராட் கோலிக்கு சமமாக, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் ஒப்பிடு வைத்து அலசப்படுகிறார். அவருக்கென்று பிரத்தியேக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மேலும் அவர் தனிப்பட்ட வீரராக மட்டுமே சிறப்பானவராக இல்லாமல், அவருடைய பேட்டிங் திறமை பாகிஸ்தான் கிரிக்கெட்டை எழுச்சி அடைய வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
தற்பொழுது பாபர் ஆசாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கௌரவ அடையாளமாக பாகிஸ்தானியர்களால் முன்னிறுத்தப்படுகிறார். பாபர் ஆசாமை பொருத்தவரை எடுத்துக் கொண்டால், மிகக் குறிப்பாக அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான தொடர்ச்சியான செயல்பாட்டை கொண்டு இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய ரன் சராசரி 60க்கும் மேல் இருக்கிறது.
Trending
அதே சமயத்தில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிக வேகமாக சதங்களை குவித்து வருகிறார். ஆசியக் கோப்பை முதல் போட்டியில் நேபால் அணிக்கு எதிராக 151 ரன்கள் விளாசியதின் மூலம், 19 ஒரு நாள் கிரிக்கெட் சதங்களை மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் அடுத்தவர் என்ற உலகச் சாதனையை படைத்தார்.
தற்பொழுது இந்திய கிரிக்கெட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் இளம் வலதுகை பேட்ஸ்மேனான ஷுப்மன் கில்லிடம், தற்போதைய கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வரும், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாபர் அசாம் விளையாட்டை பார்த்து பின் தொடர்கிறிர்களா? என்று கேட்கப்பட்டது.
இது குறித்து பேசிய ஷுப்மன் கில் கூறும் பொழுது, “ஆம் கண்டிப்பாக நாங்கள் பாபர் அசாமை பின்தொடர்கிறோம். ஒரு வீரர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் பொழுது, அவர்கள் எப்படி இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார்கள்? அப்படி செயல்படுவதற்கு காரணம் என்னவாக இருக்கும்? என்பதை கண்டறிய அவர்களைப் பின்தொடர்கிறார்கள். இதுவே பாபருக்கும் பொருந்தும். அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். நாங்கள் அவரை அங்கீகரிக்கிறோம் மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now