
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸு சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்த இந்திய வீரர்கள் ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்டனர் . இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டி ஜூலை 12ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்தப் போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்து 2023 ஆண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பையில் பங்குபெறும் வாய்ப்பை இழந்துள்ளது . இதனால் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது .
மறுபுறம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தோல்வியை தழுவி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது . மேலும் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரானது 2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் வருவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .