
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் முடிவில் நேபாள் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 6ஆம் தேதி துவங்கிய சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசத்தை தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்ட பாகிஸ்தான் 7 விக்கெட் எளிதான வெற்றி பெற்றது.
கடாபி நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் போராடி 38.4 ஓவரில் 193 ரன்ளுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முஸ்பிகர் ரஹீம் 64 ரன்களும் கேப்டன் சாகிப் அல் ஹசன் 53 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 4 விக்கெட்களையும் நாசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
அதைத்தொடர்ந்து 194 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு பகர் ஸமான் 20 ரன்களும் கேப்டன் பாபர் ஆசாம் 17 ரன்களில் அவுட்டாக்கி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 78 ரன்களும் முகமது ரிஸ்வான் 63 ரன்களும் எடுத்து 39.3 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியைப் பெற்ற பாகிஸ்தான் நம்முடைய அடுத்த போட்டியில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி பரம எதிரி இந்தியாவை மீண்டும் எதிர்கொள்கிறது.