Advertisement

நாங்கள் அரை இறுதிக்கு செல்வதற்குதான் விளையாட வந்திருக்கிறோம் - லோகன் வான் பீக்!

நாங்கள் அரை இறுதிக்கு செல்வதற்குதான் விளையாட வந்திருக்கிறோம். எங்களுடைய முழுத் தயாரிப்பு திட்டத்திலும் இது தெளிவாக இருக்கிறது என நெதர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் லோகன் வான் பீக் கூறியுள்ளார்.

Advertisement
நாங்கள் அரை இறுதிக்கு செல்வதற்குதான் விளையாட வந்திருக்கிறோம் - லோகன் வான் பீக்!
நாங்கள் அரை இறுதிக்கு செல்வதற்குதான் விளையாட வந்திருக்கிறோம் - லோகன் வான் பீக்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 24, 2023 • 10:24 PM

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நாளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி விளையாட இருக்கிறது. தற்போதுள்ள நிலையில் நெதர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் யாருடன் விளையாடினாலும் அந்த போட்டி சாதாரணமானது என்று ரசிகர்களால் ஒதுக்க முடியாது. ஆஃப்கானிஸ்தான் அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் என இரண்டு பெரிய அணிகளை வீழ்த்தி ஆச்சரியத்திலும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 24, 2023 • 10:24 PM

அதே சமயத்தில் நெதர்லாந்து அணி இந்தத் தொடரில் இந்தியாவுக்கு அடுத்து பலமிக்க பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சகல துறைகளிலும் சிறப்பாக விளங்கும் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. எனவே இப்படியான காரணங்களால் இந்த இரு அணிகளையும் எந்த இடத்திலும் குறைவாக மதிப்பிட முடிவதில்லை. மேலும் இந்த உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வங்கதேச அணியால் இதுவரை எதுவும் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

இந்த நிலையில் நெதர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் லோகன் வான் பீக் ஆஸ்திரேலியா போட்டி குறித்து பேசுகையில், “ஏன் எங்களால் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியாது? நாங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம் உங்களுக்கும் தெரியும். நாங்கள் அரை இறுதிக்கு செல்வதற்குதான் விளையாட வந்திருக்கிறோம். எங்களுடைய முழுத் தயாரிப்பு திட்டத்திலும் இது தெளிவாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்க வெற்றி எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. 

போட்டியின் நாளில் நாங்கள் விளையாடும் விதத்தில் சிறப்பாக சென்றால் எங்களால் மேலும் ஒரு பெரிய அணியை சுலபமாக வீழ்த்த முடியும். நாங்கள் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதற்கு முக்கிய காரணம் எங்களுடைய தயாரிப்பில் இருந்த நிலைத்தன்மைதான். எனவே நாங்கள் யாரை எதிர்த்து போனாலும் அது ஓமனாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவாக இருந்தாலும், தயாரிப்பின் அடிப்படையில் நாங்கள் ஒரே முறையில்தான் செல்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement