Advertisement

நாங்கள் ரோபோக்கள் கிடையாது - ஜோஸ் பட்லர் காட்டம்!

நாங்கள் ரோபோக்கள் கிடையாது. சில சமயங்களில் நீங்கள் வழக்கமாக விளையாடுவது போல விளையாட மாட்டீர்கள் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.  

Advertisement
நாங்கள் ரோபோக்கள் கிடையாது - ஜோஸ் பட்லர் காட்டம்!
நாங்கள் ரோபோக்கள் கிடையாது - ஜோஸ் பட்லர் காட்டம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 06, 2023 • 01:26 PM

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் மிகச் சிறப்பான முறையில் நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துவங்கி இருக்கிறது. மிகப்பெரிய பலம் கொண்ட வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியாகக் கணிக்கப்பட்ட இங்கிலாந்து அணியை, வெகு எளிதாக நியூஸிலாந்து அணி வீழ்த்தியுள்ளது இந்த உலகக் கோப்பை குறித்து புதிய பார்வையை மற்ற எல்லா அணிகளுக்கும் உருவாக்கி இருக்கிறது என்று கூற வேண்டும்.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 06, 2023 • 01:26 PM

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 282 எடுத்த இங்கிலாந்து, அடுத்து பந்துவீச்சில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கான்வே மற்றும் ரவீந்திர இருவரையும் என்ன செய்வது? என்று தெரியாமல் நின்றது. சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்து 36.2 ஓவரில் ஆட்டத்தை முடித்து விட்டு போய்விட்டார்கள்.

Trending

இந்த தோல்விக்கு பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் “நாங்கள் ரோபோக்கள் கிடையாது. சில சமயங்களில் நீங்கள் வழக்கமாக விளையாடுவது போல விளையாட மாட்டீர்கள். இனிய நாட்கள் திரும்ப வரும். எல்லோரும் கடினமாக உழைக்கிறார்கள். நான் சொன்னது போல நாங்கள் கொஞ்சம் பின்தங்கி விட்டோம். ஆமாம் இது நிச்சயம் ஏமாற்றம்தான். நாங்கள் முற்றிலும் செயலிழக்கப்பட்டவர்களாக ஆனோம். 

ஆனால் முதலில் நினைவுக்கு வருவது நீங்கள் ஒரு ரன், ஒரே போட்டியில் தோற்றீர்களா என்பதுதான்.மிக நீண்ட தொடரில் துவக்கத்தில் இது ஒரு தோல்வி. என் அணியில் இதை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள நான் ஊக்குவிப்பேன். பென் ஸ்டோக்ஸ் ஒரு சிறந்த வீரர். ஆனால் அவரைப் போல சிறந்த வீரர்கள் எங்கள் அணியில் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த போட்டியில் எங்கள் வீரர்கள் அனைவரும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்தார்கள். ஆனால் அவர்கள் போதுமான பங்களிப்பை தரவில்லை.

நாங்கள் ஷாட் மேக்கிங்கில் தவறாக இருந்தோம். நாங்கள் இறுதிக்கட்ட ஓவர்களில் நியூசிலாந்துக்கு சில விக்கெட்டுகளை பரிசளித்தோம். நாங்கள் குறைவாக ரன்கள் எடுத்து விட்டோம். விளக்கு வெளிச்சத்தில் விக்கெட் சிறப்பாக மாறிவிட்டது. ஆனால் நாங்கள் பேட்டிங்கை பொறுத்தவரை மிகவும் பின்தங்கி விட்டோம்” என்று கூறியுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement