முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினோம்- அஜிங்கியா ரஹானே!
இது வீரர்கள் பயமின்றி விளையாட விரும்பும் ஒரு வடிவமாகும், அதனால் அவர்களுக்கு தேவையான சுதந்திரம் கொடுக்க விரும்புகிறோம் என்று கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துருவ் ஜூரேல் 33 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் தலா 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் தரப்பில் வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Trending
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியில் மொயீன் அலி 5 ரன்னிலும், கேப்டன் அஜிங்கியா ரஹானே 18 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குயின்டன் டி காக் 8 பவுண்டரி 6 சிக்ஸர்கள் என 97 ரன்களையும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 22 ரன்களையும் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய அஜிங்கியா ரஹானே, "இப்போட்டியின் முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினோம். மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுத்தி எதிரணியை கட்டுப்படுத்தியதும் மிக முக்கியமானதாகும். இப்போட்டியில் வாய்ப்பு பெற்ற மொயீன் அலியும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். இது வீரர்கள் பயமின்றி விளையாட விரும்பும் ஒரு வடிவமாகும், அதனால் அவர்களுக்கு தேவையான சுதந்திரம் கொடுக்க விரும்புகிறோம்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் வெற்றிபெற்றது எங்கள் பந்துவீச்சுப் பிரிவுக்கும் பெருமை சேரும்.மொயீன் கடந்த காலங்களில் தொடக்க வீரராக இருந்த ஒரு தரமான வீரர். ஆனால் இன்றைய ஆட்டத்தில் அவரால் பேட்டிங்கில் சோபிக்க முடியவில்லை. ஆனால் பந்துவீச்சில் அவர் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சியடைகிறோம். தற்போதைய தருணத்தில் நிலைத்திருப்பதுதான் சவால், ஒவ்வொரு ஆட்டமும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now