
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தற்போது அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கு இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் .
காயம் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடல் தகுதியை நிரூபித்து ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைக்கு முன்பாக அயர்லாந்து தொடரில் இந்திய அணியை வழி நடத்துகிறார் . மேலும் காயம் காரணமாக ஓய்வில் இருந்த மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரதீப் கிருஷ்ணாவும் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறார் ..
ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் மற்றும் பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோரின் உடற்தகுதியும் அவர்களது பந்துவீச்சு திறனும் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இந்த தொடரில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை பார்ப்பதற்கும் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.