
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு பிரிவில் இரண்டு அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் சிறந்த அணிகள் கூட வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் 2இல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் உள்ளது. இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியதன் காரணமாக வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்பு சற்று மங்கிய நிலையில் உள்ளது. இந்தியாவும் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி நாளை வங்காதேசத்துடன் மோதுகிறது. அதைத்தொடர்ந்து 6ஆம் தேதி ஜிம்பாப்வே உடன் மோதுகிறது. இரண்டிலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி. ஒன்றில் தோல்வியடைந்து மற்றொன்றில் வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.