
பேட்டிங்கில் போதுமான அளவு ரன்களைச் சேர்க்கவில்லை - குசால் மெண்டிஸ்! (Image Source: Google)
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கை அணியை 241 ரன்களுக்கு சுருட்டியது.
இதனை அடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா, ஹஸ்மதுல்லா மற்றும் அஸ்மதுல்லா ஆகியோர் அரைசதம் அடிக்க 45 புள்ளி இரண்டு ஓவர்கள் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எழுந்து ஆப்கானிஸ்தான அணி வெற்றி இலக்கை எட்டியது.
இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ், “எங்கள் அணியில் பேட்டிங் போதிய அளவில் ரன் சேர்க்கவில்லை. நாங்கள் 300 ரன்கள் இல்லை குறைந்தபட்சம் 250 ரன்கள் அடித்திருந்தால் இன்றைய ஆட்டத்தில் தற்காத்துக் கொள்ள போதுமானதாக இருந்திருக்கும்.