
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கோலாகலமாக நடைபெற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. இந்த டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபிஞ்ச் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.
அதன்படி பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் என்ற சிறப்பான ரன் குவிப்பை வழங்கியது. இருப்பினும் அதனை சேஸிங் செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றது. அதுமட்டுமின்றி டி20 உலகக் கோப்பையையும் முதல் முறையாக கைப்பற்றியது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் இறுதியில் அவர்கள் தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.