மயங்க் யாதவ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களிடம் உள்ளனர் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இந்திய அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த சிரமமுல் இல்லை என வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ கூறி ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாகி தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Trending
இதற்கு மத்தியில், இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த சிரமமுல் இல்லை என வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ கூறி ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் அணியில் வீரர்களில் இதே போன்ற சில வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதனால் நாங்கள் மயங்க் யாதவைப் பற்றி அதிகம் கவலைப்பட்டதாக நான் நினைக்கவில்லை.
ஆனால் அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர். எங்களிடமும் அதேபோல் திறன் உள்ளது, ஆனால் எங்கள் திறன்களை மேம்படுத்துவதற்கான சரியான இடத்தில் நாங்கள் இல்லை. கடந்த 10 வருடங்களாக நாங்கள் இப்படித்தான் பேட்டிங் செய்து வருகிறோம். இது சில நேரங்களில் நாங்கள் சிறப்பாக செய்துள்ளோம். ஆனால் சில நேரங்களில் எங்களுக்கு இது கைகொடுப்பதில்லை. அதனால் நாங்கள் வலை பயிற்சியின் போதே அதிரடியாக விளையாட மயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நஜ்முல் ஹொசன் சாண்டோவின் இக்கருத்தானது ரசிகர்களை சற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இந்திய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் சராசரியாக 150+ வேகத்தில் பந்துவீச கூடிய வீரராவார். ஆனால் வங்கதேச அணியில் அதிகபட்சமாக் தஸ்கின் அஹ்மத் 145+ வேகத்தில் வீசக்கூடியவரே தவிர மற்ற எந்த வீரரும் பெரிதளவில் வேகமாக பந்துவீசியது கிடையாது. இப்படியான சூழலில் நஜ்முல் ஹொசைனின் கருத்தானது ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.
#INDvBAN #India #TeamIndia #Cricket #MayankYadav #NajmulHossainShanto pic.twitter.com/HdpJdKrpt5
— CRICKETNMORE (@cricketnmore) October 8, 2024
வங்கதேச டி20 அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தன்ஸித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமன், தாவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், ஜாகர் அலி, மெஹ்தி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், ரிஷாத் ஹுசைன், முஸ்தஃபிசூர் ரஹ்மான், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சீம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன்.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now