
டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் பாகிஸ்தானும் தங்கள் முதல் போட்டியில் மோதுகின்றனர். இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலும், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமின் தலைமையிலும் மோதுகின்றன.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவரும் இந்த போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் கேப்டன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர், “நாளை நடைபெறும் போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. போட்டி முழுமையாக நடைபெற இருந்தால், நன்றாக இருக்கும். ஆனால் மழையின் காரணமக குறுகிய வடிவிலான போட்டியாக இருந்தாலும், அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
இந்திய அணியை பொறுத்தவரை டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து பந்துவீச்சாளர்களை மிரட்டுகிறார். எங்களிடம் சூர்யகுமார் யாதவ் மட்டுமல்ல, ஒவ்வொரு வீரருக்கும் திட்டங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் சரியாகச் செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன்