
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.
அதே போல் 11ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியையும், 14ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியையும் எதிர்கொள்ள உள்ளது. வழக்கம் போல் இந்த உலகக்கோப்பை தொடரிலும், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுதால், முன்னாள் இந்நாள் வீரர்கள் பலரும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்ற் பெறுவது இந்திய அணிக்கு மிக முக்கியமானது என தெரிவித்துள்ளார்.