நாங்கள் கற்றுக்கொள்ள சில பாடங்கள் உள்ளன - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் எங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடும்போது நாங்கள் ஒரு நல்ல அணி என்பதை நாங்கள் அறிவோம் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிக்கோலஸ் பூரன் 45 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறவினர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 39 ரன்களையும், இஷான் கிஷன் 35 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 47 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்த வெற்றி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இப்போட்டியில் நாங்கள் எதிர்பாத்த ரன்களை விட அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்தோம், இது ஒரு நல்ல விக்கெட், ஆனால் சேஸிங் குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஈஷான் மலிங்கா ஒரு அணியாக எங்களுக்கு மிகச் சிறந்தவராகவும் மிகப்பெரிய சொத்தாகவும் இருந்துள்ளார். அவரது செயல்திறன் இந்த சீசனில் மிகவும் சிறப்பாக இருந்தது.
Also Read: LIVE Cricket Score
சில நேரங்களில், அவர்கள் சிறந்த நிலையில் இருக்கும்போது, அவர்கள் அதிக ரிஸ்க் எடுப்பது போல் தெரியவில்லை. நாங்கள் எங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடும்போது நாங்கள் ஒரு நல்ல அணி என்பதை நாங்கள் அறிவோம். கற்றுக்கொள்ள சில பாடங்கள் மட்டுமே உள்ளன. அதனால் எங்கள் தவறுகளை திருத்தி நாங்கள் மீண்டும் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன்” என்று கூறிவுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now