
இந்திய அணியின் அனுபவ வீரரும், தமிழக சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி இருந்தார். இதனைத் தொடர்ந்து நாடு திரும்பியுள்ள அஸ்வின் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்து வரும் அஸ்வின் அவ்வப்போது நடைபெறும் கிரிக்கெட் தொடர்பான முக்கிய நிகழ்வுகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் மூலம் ரசிகர்களிடம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ரஞ்சி தொடரில் விளையாடி வரும் வீரர்கள் குறித்தும் அவர் பேசி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இந்தியாவில் ரஞ்சி கோப்பை தொடர் தொடர் நடைபெற்று வரும் வேளையில் ஒவ்வொரு மாநில அணியிலும் சிறப்பாக விளையாடும் வீரர்களை சரியாக குறிப்பிட்டு அஸ்வின் பல்வேறு செய்திகளை ரசிகர்களுக்காக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அசாம் மாநில அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக்கின் ஆட்டத்தை அஸ்வின் பாராட்டியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.