
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி பயிற்சி செய்த நிலையில் தோனி திடீரென்று ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வந்து வீரர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தார்.
இதைப் போன்று ராஞ்சி வந்த உடனே ஹர்திக் பாண்டியா தோனியின் வீட்டிற்கு சென்று அவருடன் பழைய பைக்கில் உட்கார்ந்து போஸ் எடுத்து போட்டோ பதிவிட்டார். இது குறித்து செய்தியாளர்கள் ஹர்திக் பாண்டியாவிடம் தோனியிடம் டிப்ஸ் ஏதாவது கேட்க அவரை சந்தித்தீர்களா என்று கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா, “இல்லை நான் தோனியுடம் விளையாடும்போது அவரிடம் கிரிக்கெட் தொடர்பாக நிறைய நுணுக்கங்களை கற்று இருக்கிறேன்.
இப்போது எல்லாம் நான் தோனியை சந்திக்கும் போது வாழ்க்கை குறித்தும் வேறு சில விஷயங்கள் குறித்தும் தான் பேசுகிறேன். கிரிக்கெட் பற்றி நாங்கள் இப்போது பேசுவதே கிடையாது. கிரிக்கெட் தொடர்பாக ஒரு ஆண்டில் நான் என்னென்ன அவரிடம் கற்றுக் கொள்ள முடியுமோ அத்தனையும் கற்று விட்டேன். தற்போது அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள எதுவுமே எனக்கு இல்லை. நாங்கள் தற்போது பல்வேறு நகரங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.