Advertisement

தென் ஆப்பிரிக்காவின் சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் - பாட் கம்மின்ஸ்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் இறுதிப் போட்டியை அடைய நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்த அனைவருக்கும் இது ஒரு சான்றாகும் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
தென் ஆப்பிரிக்காவின் சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் - பாட் கம்மின்ஸ்!
தென் ஆப்பிரிக்காவின் சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 16, 2025 • 01:08 PM

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 11ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 16, 2025 • 01:08 PM

இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

மேற்கொண்டு இத்தொடருக்கான பரிசுத்தொகையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு $3.6 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.30.8 கோடி தோராயமாக) வழங்கப்படும் என்றும், இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு $2.16 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.18.48 கோடி தோராயமாக) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த சீசன்களைக் கட்டிலும் 125 சதவீதம் அதிகமாகும். 

இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை, குறிப்பாக லார்ட்ஸில் பாதுகாக்க வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இறுதிப் போட்டியை அடைய நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்த அனைவருக்கும் இது ஒரு சான்றாகும், இது நம் அனைவருக்கும் ஒரு பெரிய மரியாதை.

சில வாரங்களில் இங்கிலாந்தில் மீண்டும் ஒன்று சேர நாங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம், மேலும் தென் ஆப்பிரிக்கா அணி கிரிக்கெட்டின் தாயகத்தில் முன்வைக்கும் சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நடப்பு சாம்பியனானா ஆஸ்திரேலிய தற்சமயம் அனுபவம் மற்றும் இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதிலும் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அணிகள்

தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ், லுங்கி இங்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன்.

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலியா அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement