
இந்திய அணி தொடர்ந்து 2 டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்துள்ளது. மேலும் நடப்பாண்டில் தென் ஆப்பிரிக்காவிடம் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், 2ஆவது போட்டியில் இந்தியா பயன்படுத்திய யுத்தி மற்றும் தோல்விக்கான காரணம் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.
அப்போது பேசிய அவர், “எங்களுடைய கவனம் எல்லாம் இருத்தரப்பு தொடரை வெல்வதில் இல்லை. உலகக் கோப்பை மீது தான் எங்கள் கவனமே உள்ளது. இப்போது நடைபெறும் போட்டிகளை எல்லாம் பயிற்சியாகவும், பாடமாகவும் தான் கருதுகிறோம். அணியின் ஆலோசனை கூட்டத்தில் போட்டிக்கான திட்டத்தை வகுக்கிறோம்.
ஆனால், அதனை போட்டியில் நடைமுறைப்படுத்துவதில் தவறு நீடிக்கிறது. இந்த தவறை ஒரு அணியாக கற்று கொண்டு அடுத்த போட்டியில் திருத்தி கொள்ள முயற்சி செய்வோம். அது தான் ஆஸ்திரேலிய பயணத்துக்கு முக்கியமானவை. நாங்கள் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அதிரடியாக தான் ஆடுவோம் என்று முடிவு செய்து இருந்தோம்.