
பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று தரம்சாலாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 92 ரன்களையும், ராஜத் பட்டிதார் 57 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், வித்வாத் கவெரப்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரைலீ ரூஸோவ், ஷஷாங்க் சிங் உள்ளிட்ட வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஆர்சிபி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டி முடிவுக்கு பின் தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண், “இந்த சீசன் முழுவதும் நிறைய நேர்மறையான அறிகுறிகள் இருந்தன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நாங்கள் இலக்கை எட்ட போதுமானதாக இல்லை. எஞ்சிய போட்டிகளுக்கு நாங்கள் சிறந்த பக்கத்தைக் கொண்டுள்ளோம் என்பதை அறிவோம். மேலும் ஒரு அணிக்காக தைரியமாக உணர்கிறோம். நம் தலையை உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும், கற்றுக் கொண்டே இருக்க வேண்டும், மேலும் சிறப்பாக இருக்க வேண்டும்.