
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த 45 லீக் போட்டிகளின் முடிவில் சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்ட இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
பொதுவாகவே கடந்த 2013க்குப்பின் இந்தியா நாக் அவுட் சுற்றில் பெரும்பாலும் தோல்விகளை சந்தித்து வருவதை அனைவரும் அறிவோம். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை விளையாடிய 3 ஐசிசி நாக் அவுட் போட்டிகளிலும் இந்தியா தோல்விகளையே சந்தித்துள்ளது. அதிலும் கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் நியூசிலாந்திடம் தோனி – ஜடேஜா போராட்டத்தை தாண்டி இந்தியா தோற்றதை ரசிகர்களால் மறக்க முடியாது
இதனால் கவலையடைந்துள்ள ரசிகர்கள் இதே தொடரில் 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து ஆட்டத்ததைப் போல மீண்டும் அரையிறுதிச்சுற்றில் இந்தியா நிகழ்த்துமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சொந்த மண்ணில் அச்சுறுத்தலை கொடுக்கும் வலுவான இந்தியாவை சமாளித்து வெற்றி பெறும் அளவுக்கு தங்களுடைய அணியில் அனுபவம் மிகுந்த வீரர்கள் நிறைந்திருப்பதாக இங்கிலாந்து வீரர் டேவோன் கான்வே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.