
We won't be able to afford Suryakumar Yadav in BBL - Glenn Maxwell (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் 'மிஸ்டர் 360 டிகிரி' வீரராக உருவெடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். ஐசிசி-யின் டி20 தரவரிசை பேட்ஸ்மேன்களில் தற்போது முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் சூர்யகுமார் யாதவ் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாக ஆடி ரன்கள் குவித்து வருகிறார்.
இவரின் அதிரடி ஆட்டத்தால் கடந்த ஒரு ஆண்டுகளாக இந்திய அணி பல போட்டிகளில் வெற்றியை ருசித்து உள்ளது. நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் ஆறு போட்டிகளில் 239 ரன்களை குவித்து அவர் அசத்தி இருந்தார்.
அதை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மூன்றாவது முறையாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். இந்த நிலையில் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமாரை ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.