
டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக அபிஷேக் போரெல் 58 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹாக் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய லக்னோ அணியா டாப் ஆர்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மிடில் ஆர்டரில் வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அர்ஷத் கான் அதிரடியாக விளையாடவே லக்னோ வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வரை போராடியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை மட்டுமே சேர்த்து 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸிடம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த், “இப்போட்டியில் நிக்கோலஸ் பூரன் எங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். அவருக்கு ஏற்றவாறு எங்களிடம் சில திட்டங்களும் இருந்தன. ஏனெனில் எங்களுடைய இலக்கே எங்களுக்கு போதுமானதாக இருந்தது. அதனால் நாங்கள் நால்ல லெந்தில் மட்டுமே பந்துவீச வேண்டும் என்று யோசித்தோம். இந்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னரே நாங்கள் நிறைய நம்பிக்கையுடம் இருந்தோம். அனால் சில வீரர்கள் காயமடைந்ததின் காரணமாக எங்களால் தொடர்ச்சியாக வெற்றிகளை பெறமுடியவில்லை.