
'West Indies All The Way' For Darren Sammy In T20 World Cup (Image Source: Google)
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. உலக கோப்பை நடக்கும் ஐக்கிய அரபு அமீரக கண்டிஷன் பாகிஸ்தானுக்கு நன்கு பழக்கப்பட்டது என்பதால் அந்த அணியும் சிறப்பாக ஆடும் என்றும் மதிப்பிடப்படுகிறது.
ஆனாலும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 அணிகளுக்குமே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமுள்ளது. இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வென்றதில்லை என்ற விமர்சனத்தை உடைத்தெறிய இந்த கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற தீவிரத்தில் விராட் கோலி உள்ளார் .