
இங்கிலாந்து அணி சமீபத்தில் இலகிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது, சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இத்தொடரில் களமிறங்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர், சில சாதனைகளை படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. அதன்படி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இப்போட்டியில் ஜேசன் ஹோல்டர் மேர்கொண்டு 7 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 6ஆவது வீரர் எனும் மைக்கேல் ஹோல்டிங்கின் சாதனையை முறியடிப்பார்.