வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான வேலைகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஈடுபட தொடங்கியுள்ளது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த ஆண்டு ஆஃப்கானிஸ்தானுடன் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளன. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மேலும் தொடரின் முதல் போட்டியானது ஜனவரி 19ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் ஜனவரி 21 மற்றும் 22ஆம் தேதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன. இதனால் இந்த் சூழலிற்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஆஃப்கானிஸ்தானுடன் இந்த டி20 தொடரில் விளையாடவுள்ளதாக கூறப்படுகிறது.