-mdl.jpg)
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது இன்று (ஜூலை 10ஆம் தேதி) புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் இப்போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்திய அணியில் கஸ் அட்கின்ஸன் மற்றும் ஜேமி ஸ்மித் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேக் பிராத்வைட் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர் மைக்கேல் லூயிஸிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.