Advertisement
Advertisement
Advertisement

WI vs IND: 18 பேர் கொண்ட விண்டீஸ் அணி அறிவிப்பு; ஹோல்டர், அல்ஸாரி நீக்கம்!

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 18 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan June 30, 2023 • 10:14 AM
West Indies announce preparatory squad for India Test series!
West Indies announce preparatory squad for India Test series! (Image Source: Google)
Advertisement

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியை மாற்றி அமைப்பதற்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்தச் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டது. டி20 தொடருக்கான அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

அறிவிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். இவர்களது இடத்தில் இளம் வீரர் ஜெய்ஷ்வால் மற்றும் முகேஷ் குமார் இருவரும் இடம் பிடித்தார்கள். மேலும் இரண்டு இந்திய அணிகளுக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்ந்தார். டெஸ்ட் அணிக்கு ரகானே ஒருநாள் அணிக்கு ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்கள்.

Trending


தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வேவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான தகுதிசுற்றில் விளையாடி வருகிறது. முக்கிய வீரர்கள் அங்கு இருப்பதால், அந்தத் தொடரை முடித்துக் கொண்டு ஜூலை 12ஆம் தேதி நடக்கும் இந்திய டெஸ்ட் தொடரில் பங்கேற்பது கடினம்.

எனவே இதை மனதில் வைத்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் நட்சத்திர வீரர்களான ஜேசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ், அல்ஸாரி ஜோசப் போன்ற வீரர்கள் சேர்க்கப்படவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணி: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜெர்மைன் பிளாக்வுட், என்க்ருமா பொன்னர், டக்னரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், கவேம் ஹாட்ஜ், அகீம் ஜோர்டான், ஜெய்ர் மெக்அலிஸ்டர், கிர்க் மெக்கென்சி, மார்கினோ மைண்ட்லி, ஆண்டர்சன் பிலிப்,ரேமன் ரெய்ஃபர், கீமார் ரோச், ஜேடன் சீல்ஸ், ஜோமெல் வாரிக்கன்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement