
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி நட்சத்திர வீரருமான நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நடந்து முடிந்துள்ள இரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று சௌத்தாம்ப்டனில் இன்று நடைபெறவுள்ளது.
அதன்பின் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இத்தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரனுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. மேலும் அவரே முன் வந்து இத்தொடர்களில் தனக்கு ஓய்வளிக்கும் படி கூறியதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.