
West Indies Bowling Thrashes Bangladesh To 103/10 In The First Test (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நார்த்சவுண்டில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோரைத் தவிர வேறுயாரும் சொல்லிக்கொள்ளும் அளவில் ரன் சேர்க்கவில்லை.
இதனால் 32.5 ஓவர்களிலேயே வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 51 ரன்களைச் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், அல்ஸாரி ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.