 
                                                    வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியும் அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தன்ஸித் ஹசன் - பர்வேஸ் ஹொசைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் பர்வேஸ் ஹொசைன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸ் 6 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சைஃப் ஹொசைன் 23 ரன்னிலும், ரிஷாத் ஹொசைன் 3 ரன்னிலும், நுருல் ஹசன் ஒரு ரன்னிலும், நசும் அஹ்மத் ஒரு ரன்னிலும், ஜக்கர் அலி 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த தன்ஸித் ஹசன் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய தன்ஸித் ஹசன் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 89 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் வங்கதேச அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரொமாரியோ ஷெஃபெர்ட் 3 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர், காரி பியர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        