
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய யுஏஇ அணியில் கேப்டன் முகமது வாசீம் ரன்கள் ஏதுமின்றியும், அர்யான்ஷ் சர்மா 5 ரன்களிலும், ரமீஷ் ஷஷாத 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அரவிந்த் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஆசிஃப் கான், முஸ்தஃபா, அஃப்சல் கான் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அலி நாசெர் மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து 58 ரன்களை கடந்த நிலையில் ஆட்டமிழக்க, 47.1 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரக அணி 202 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளையும், டோமினிக் டார்க்ஸ், ஓடியன் ஸ்மித், கரியா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.