Advertisement
Advertisement
Advertisement

WI vs BAN, 2nd T20I: பாவல், கிங் அதிரடியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!

வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan July 04, 2022 • 13:25 PM
West Indies Ease To Victory Over Bangladesh In 2nd T20I
West Indies Ease To Victory Over Bangladesh In 2nd T20I (Image Source: Google)
Advertisement

வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி டொமினிகாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

Trending


அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பிராண்டன் கிங், ரோவ்மன் பாவலின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் அரை சதமடித்து 57 ரன்னிl அவுட்டானார். கடைசி கட்டத்தில் இறங்கிய ரோவ்மென் பாவெல் அதிரடியில் மிரட்டினார். அவர் 28 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 61 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அமாமுல் ஹக் 3, லிட்டன் தாஸ் 5, மஹ்மதுல்லா 11 என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஷாகிப் அல் ஹசன் - அபிஃப் ஹொசைன் ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷகிப் அல் ஹசன் அரை சதம் கடந்தார். அபிப் ஹொசைன் 34 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், வங்காளதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷகிப் அல் ஹசன் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement