
வெஸ்ட் இண்டீஸ் அணி வருகின்ற அடுத்தாண்டு ஜனவரி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்தச் சுற்றுப் பயணத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட், தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஜேசன் ஹோல்டர் மற்றும் கைய்ல் மேயர்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் விலகிக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய செல்வதற்கு தேவையான முன்னணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகத்துக்கு கிடைக்கவில்லை. அதே சமயத்தில் சுற்றுப்பயணத்தை விட்டுத் தரமுடியாது. எனவே கிரேக் பிராத்வைட் தலைமையில் ஏழு இளம் அறிமுக வீரர்களை உள்ளடக்கிய அணியை வெஸ்ட் இண்டீஸ் தேர்வுக் குழு அறிவித்திருக்கிறது.