
Shamar Joseph Record: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 10ஆவது வரிசையில் பேட்டிங் செய்து அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் எனும் சாதனையை வெஸ்ட் இண்டீஸின் ஷமார் ஜோசப் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ஜூன் 25ஆம் தேதி பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ரன்களில் ஆல் அவுட்டான நிலையிலும், 10 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியானது டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரின் அரைசதங்களின் காரணமாக 310 ரன்களைச் சேர்த்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 301 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.