SA vs WI, 1st T20I: பாவெல் அதிரடியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டத்தன் காரணமாக போட்டி தொடங்குவது தாமதமானது. அதன்பின் இப்போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 21 ரன்களிலும், ரைலி ரூஸோவ் 10 ரன்களிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 14 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் ஒரு ரன்னிலும், என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Trending
இருப்பினும் 5ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய டேவிட் மில்லை விக்கெட் இழப்பை பற்றி கவலையில்லாமல் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகள் என 48 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இறுதியில் சிசாண்டா மகாலா இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரியை விளாசி இன்னிங்ஸை முடித்து வைத்தார். இதன்மூலம் 11 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷெல்டன் காட்ரெல், ஓடியன் ஸ்மித் தலா 2 விக்கெட்டுகளைக் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின ஜோடி சேர்ந்த பிராண்டன் கிங் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் கிங் 23 ரன்களிலும், சார்லஸ் 28 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த நிக்கோலஸ் பூரனும் 16 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
பின் கேப்டன் ரோவ்மன் பாவெல் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், ரோமாரியோ செஃபெர்ட், ஓடியன் ஸ்மித், அகீல் ஹொசைன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஆனாலும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோவ்மன் பாவெல் 18 பந்துகளில் 5 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 43 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 10.3 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now