Advertisement
Advertisement
Advertisement

IND vs WI: இந்தியா வந்தடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்! 

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு 1000ஆவது போட்டியாகும்.

Advertisement
West Indies Squad Arrive In Ahmedabad Ahead Of Limited Overs Series Against India
West Indies Squad Arrive In Ahmedabad Ahead Of Limited Overs Series Against India (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 02, 2022 • 01:16 PM

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 02, 2022 • 01:16 PM

அதன்படி பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இன்று காலை இந்தியா வந்தது. பார்படோசில் இருந்து ஒருநாள் போட்டி நடைபெறும் இடமான அகமதாபாத்துக்கு அந்த அணி வீரர்கள் வந்தனர்.

Trending

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகள் வருகிற 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அகமதாபாத்திலும், 20 ஓவர் ஆட்டங்கள் பிப்ரவரி 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவிலும் நடக்கிறது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு 1000ஆவது போட்டியாகும். இதன் மூலம் இந்திய அணி புதிய வரலாறு படைக்கிறது. ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற சாத னையை படைக்க உள்ளது.

ஒருநாள் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் கொல்கத்தாவில் நடைபெறும் 20 ஓவர் போட்டிகளுக்கு 75 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: போல்லார்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரண், பேபியன் ஆலன், டாரன் பிராவோ, ஹோல்டர், ‌ஷய்ஹோப், அகீல் ஹூசைன், புரூக்ஸ், போனர், பிரண்டன் கிங், கேமர்ரோச், அல்ஜாரி ஜோசப், ஷெப்பர்டு, ஓடியன் சுமித், ஹைடன் வால்ஷ்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: போல்லார்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரண், பேபியன் ஆலன், டாரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், கோட்ரெல், டோமினிக் டிரேக்ஸ், ஹோல்டர், ‌ஷய்ஹோப், அகீல் ஹூசைன், பிரண்டன் கிங், கெய்ல் மேயர்ஸ், ரோவ்மன் பாவெல், ஷெப்பர்டு, ஓடியன் சுமித், ஹைடன் வால்ஷ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement