-lg1-mdl.jpg)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது.
இத்தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் டெஸ்ட் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணியில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான 15 வீரர்கள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாகவும், டி20 அணிக்கு ரோவ்மன் பாவெலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் டி20 அணியில் ஆண்ட்ரே ரஸல், நிக்கோலஸ் பூரன் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.