
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஆகஸ்ட் 07) டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதானமாக விளையாடிய ஐடன் மார்க்ரம் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்பட்ஸும் நிதானம் காட்டினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டோனி டி ஸோர்ஸி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 32 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இதனால் முதல்நாள் உணவு இடைவேளையானது மூன்கூட்டியே எடுக்கப்பட்டது. இந்நிலையில் அதன் பின்னரும் மழை தொடர்ந்து வரும் காரணமாக இப்போட்டியானது இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.