வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - உத்தேச லெவன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆண்ட்ரே ரஸல் ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், ஆஸிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

WI vs AUS Predicted Playing 11: வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில் இரு அணிகளுடைய கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் வென்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ஆஸ்திரேலியா
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து தொடரை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இருப்பினும் அணியின் தொடக்க வீரர் இடம் குறித்த கேள்விகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் முதல் போட்டியில் ஃபிரேசர் மெக்குர்க் விளையாடி சோபிக்க தவறிய நிலையில், கடந்த போட்டியில் கிளென் மேக்ஸ்வெல்லும் தொடக்க வீரராக விளையாடி பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினார்.
இதனால் இந்த போட்டியில் ஜோஷ் இங்கிலிஸ் அல்லது மிட்செல் ஓவன் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்த மட்டில் மிட்செல் மார்ஷ், கேமரூன் க்ரீன், மிட்செல் ஓவன், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட் என அதிரடி வீரர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, பென் துவார்ஷூயிஸ் உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா உத்தேச லெவன்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் , கேமரூன் கிரீன், டிம் டேவிட், மிட்செல் ஓவன், கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னெமன், ஆடம் ஜாம்பா.
வெஸ்ட் இண்டீஸ்
மறுபக்கம் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவியதுடன் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. பேட்டிங்கில் பிராண்டன் கிங், ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹெட்மையர், ரோஸ்டன் சேஸ் ஆகியோருடன் ஜேசன் ஹோல்டர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மன் பாவெல், ரொமாரியோ ஷெஃபெர்ட் போன்ற அதிரடி வீரர்கள் இருக்கும் நிலையிலும் அவர்களால் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகின்றனர்.
மறுமுனையில் பந்துவீச்சிலும் சொல்லிக்கொள்ளும் அளவில் சிறப்பாக செயல்பட தவறிவருகின்றன. அகீல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப் மற்றும் குடகேஷ் மோட்டி உள்ளிட்டோர் தங்களால் முடிந்த அளவு பங்களித்தாலும் மற்ற வீரர்களும் சோபிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. மேற்கொண்டு ஆண்ட்ரே ரஸலும் ஓய்வை அறிவித்துள்ளதன் காரணமாக ஆல் ரவுண்டராக அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.
Also Read: LIVE Cricket Score
வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: பிராண்டன் கிங், ஷாய் ஹோப் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மையர், ரோஸ்டன் சேஸ், ரோவ்மேன் பவல், ஷெர்ஃபான் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், குடகேஷ் மோதி, அகீல் ஹுசைன், அல்சாரி ஜோசப்.
Win Big, Make Your Cricket Tales Now