
west-indies-vs-australia-second-odi-has-been-suspended-due-to-covid (Image Source: Google)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் முதலில் நடைபெற்றது. இதில் 4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
போட்டி தொடங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில், வெஸ்ர் இண்டீஸ் அணி நிர்வாக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, உடனடியாக போட்டி தொடங்குவது நிறுத்தப்பட்டது.