வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயிண்ட் கிட்ஸில் நடைபெறுகிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டி20 போட்டி நாளை செயிண்ட் கிட்ஸில் நடக்கிறது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா
- இடம் - வார்னர் பார்க், செயிண்ட் கிட்ஸ்
- நேரம் - இரவு 8 மணி
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. முதல் டி20 போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கும்.
முதல் போட்டியில் 3ம் வரிசை வீரராக தீபக் ஹூடா / ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் யார் இறக்கப்படுவார் என்பது கேள்வியாக இருந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால் அதற்காக அடுத்த போட்டியில் அவரை நீக்கிவிட்டு தீபக் ஹூடாவிற்கு வாய்ப்பளிக்க முடியாது. ஸ்னவே ஷ்ரேயாஸ் ஐயர் தான் இந்த போட்டியிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவுலிங் காம்பினேஷனிலும் எந்த மாற்றத்திற்கான அவசியமில்லை. முதல் டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகத்தான் பந்துவீசினார்கள்.
அதேசமயம் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங், பவுலிங் என இரு பிரிவிலும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அதிலும் கடைசி கட்டத்தில் பந்துவீச்சாளர்கள் சொதப்பியதே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனாலும் அவர்களிடம் அதிரடியான டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் உள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் மீண்டுவர முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதனால் இப்போட்டியில் வானவேடிக்கைக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 21
- இந்தியா - 14
- வெஸ்ட் இண்டீஸ் - 6
- முடிவில்லை - 1
உத்தேச அணி
வெஸ்ட் இண்டீஸ் - ஷமர் ப்ரூக்ஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மேன் பவல், நிக்கோலஸ் பூரன் (கே), கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹோசைன், ஒடியன் ஸ்மித், கீமோ பால், அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய்.
இந்தியா - ரோஹித் சர்மா (கே), ரிஷப் பந்த் , ஷ்ரேயாஸ் ஐயர்/தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக்
- பேட்டர்ஸ் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷமர் புரூக்ஸ்
- ஆல்-ரவுண்டர்கள் - கீமோ பால்
- பந்துவீச்சாளர்கள் - ரவிச்சந்திரன் அஷ்வின், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அகேல் ஹொசைன், புவனேஷ்வர் குமார், அல்சாரி ஜோசப்
Win Big, Make Your Cricket Tales Now