Advertisement
Advertisement
Advertisement

SA vs WI, 2nd T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூன் 27) செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது. 

Advertisement
West Indies vs South Africa, 2nd T20I – Prediction, Fantasy XI Tips & Probable XI
West Indies vs South Africa, 2nd T20I – Prediction, Fantasy XI Tips & Probable XI (CRICKETNMORE)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 27, 2021 • 12:59 PM

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 27, 2021 • 12:59 PM

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூன் 27) செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது. 

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம்: தேசிய கிரிக்கெட் மைதானம், செயிண்ட் ஜார்ஜ்
  • நேரம்: இரவு 11.30 மணி

போட்டி முன்னோட்டங்கள்

வெஸ்ட் இண்டீஸ் 

தென் ஆப்பிரிக்க அணியுடனான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

அதிலும் எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், அண்ட்ரே ரஸ்ஸல், ஆண்ட்ரே ஃபிளட்சர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தில் பிராகாசிப்பதால், இன்றைய போட்டியிலும் அவர்களது அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல் பந்துவீச்சில் ஃபாபியன் ஆலன், டுவைன் பிராவோ ஆகியோர் சிறப்பாக செயல்படுவதால், இன்றைய போட்டியிலும் அவர்களது பந்துவீச்சி எதிரணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

தென் ஆப்பிரிக்கா

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய போட்டியில் பந்து பேட்டிங், பந்துவீச்சு என இரு பிரிவிலும் சொதப்பியது. 

அணியில் டி காக், வென் டர் டௌசன் ஆகியோரைத் தவிற மற்ற வீரர்கள் பேட்டிங்கில் அவ்வளவாக சோபிக்கவில்லை. பந்துவீச்சிலும் காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே இன்னும் தங்களது திறனை வெளிப்படுத்தாது அணியின் தோல்விக்கு வழி வகுத்தது. 

அதனால் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தங்களது தவறுகளைத் திருத்திக் கொண்டு புது உற்சாகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 11
  • வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 5
  • தென் ஆப்பிரிக்க வெற்றி - 6

உத்தேச அணி

வெஸ்ட் இண்டீஸ் - ஆண்ட்ரே ஃபிளட்சர், எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், கீரோன் பொல்லார்ட் (கே), ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரெ ரஸ்ஸல், ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ஓபெட் மெக்காய், கெவின் சின்க்ளேர்.

தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி கோக் , ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெம்பா பவுமா (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே, காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி, லுங்கி இங்கிடி.

ஃபேண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர்கள் - ஆண்ட்ரே ஃபிளெட்சர், நிக்கோலஸ் பூரன், குயின்டன் டி காக்
  • பேட்ஸ்மேன்கள் - கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், டேவிட் மில்லர், ராஸி வான் டெர்-டுசென்
  • ஆல்ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல்
  • பந்து வீச்சாளர்கள் - கெவின் சின்க்ளேர், காகிசோ ரபாடா, லுங்கி என்ஜிடி

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement