WI vs SA, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 18) செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 18) செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
- இடம் : டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம், செயிண்ட் லூசியா
- நேரம் : இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸ்
கிரேக் பிராத்வெயிட் தலையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இத்தொடரின் முதல் போட்டியில் சரியவர செயல்படாததால் படுதோல்வியைச் சந்தித்தது.
மேலும் ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், ரோஸ்டன் சேஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
பந்துவீச்சை பொறுத்தவரை கீமார் ரோச், ஜேசன் ஹோல்டர், ரஹீம் கான்வால் ஆகியோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரை சமன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா
டீல் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்து வீச்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை டி காக், மார்க்ரம் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.
அதேசமயம் பந்துவீச்சில் ரபாடா, இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் நிச்சயம் எதிரணிக்கு சவாலளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதனால் தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நேருக்கு நேர்
- மோதிய ஆட்டங்கள் - 29
- தென் ஆப்பிரிக்கா வெற்றி - 19
- வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 3
- டிராவில் முடிந்தவை - 7
உத்தேச அணி
வெஸ்ட் இண்டீஸ்- கிரெக் பிராத்வெயிட் (கே), ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், ஜெர்மைன் பிளாக்வுட், ரோஸ்டன் சேஸ், ஜோசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், ரஹீம் கார்ன்வால், கீமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ், கீரன் பவல், நக்ருமா பொன்னர்.
தென் ஆப்பிரிக்கா - டீன் எல்கர் (கே), ஐடன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், ராஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரெய்ன், குயின்டன் டி கோக், கேசவ் மகாராஜ், வியான் முல்டர், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - ஜோசுவா டா சில்வா, ஷாய் ஹோப், குயின்டன் டி காக்
- பேட்ஸ்மேன்கள் - கீரன் பவல், டீன் எல்கர், ராஸி வான் டெர்-டஸன்
- ஆல்ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ்
- பந்து வீச்சாளர்கள் - ஜெய்டன் சீல்ஸ், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி
Win Big, Make Your Cricket Tales Now