
Cricket Image for இலங்கையை ஒயிட் வாஷ் செய்து தொடரைக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்! (Image Source: Google)
இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு குணத்திலக, கருணரத்னே இணை தொடக்கம் தந்தது.
இதில் குணத்திலக 36 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 31 ரன்களில் கருணரத்னேவும் விக்கெட்டை இழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.