
West Indies Welcomes Shimron Hetmyer For The T20I Series Against India (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில் இரு அணிகள் இடையேயான டி20 தொடர் இன்று துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று இரவு பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், இந்திய அணியுடனான டி20 தொடர் மற்றும் அதன்பிறகு நடைபெறும் நியூசிலாந்து அணியுடனான டி20 தொடருக்கான விண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.