
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. 199 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 32 ரன்களில் முக்கிய இரண்டு விக்கெட்களை பறிகொடுத்தது.
ரோகித் ஷர்மா 28 ரன்களிலும், இசான் கிஷன் 3 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளித்தனர். 3ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் டெவால் ப்ரீவிஸ், திலக் வர்மா அதிரடியாக விளையாடி சற்று நம்பிக்கை அளித்தனர்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா, சூர்யாகுமாரின் தவறால் 36 ரன்களில் ரன் அவுட்டானார். அதனைத் தொடர்ந்து வந்த பொல்லார்டும் 10 ரன்களில், சூர்யாகுமாரின் தவறால் ரன்அவுட்டாக, மும்பை அணிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது.