Advertisement

உங்களுடைய நட்பை பவுண்டரிக்கு வெளியே வைத்து விட்டு களமிறங்க வேண்டும் - கௌதம் கம்பீர் தாக்கு!

இவ்வாறு செயல்படுவதால் முதன்மையான போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை பரம எதிரியாக கருதி சிறப்பாக செயல்படும் உத்வேகம் இந்திய வீரர்களுக்கு இல்லாமல் போவதாக கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். 

Advertisement
உங்களுடைய நட்பை பவுண்டரிக்கு வெளியே வைத்து விட்டு களமிறங்க வேண்டும் - கௌதம் கம்பீர் தாக்கு!
உங்களுடைய நட்பை பவுண்டரிக்கு வெளியே வைத்து விட்டு களமிறங்க வேண்டும் - கௌதம் கம்பீர் தாக்கு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 03, 2023 • 06:14 PM

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மழையால் ரத்து செய்யப்பட்டது. இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 48.5 ஓவர்கள் வரை மட்டுமே பேட்டிங் செய்து மிகவும் போராடி 266 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இசான் கிசான் 82 ரன்களும் ஹர்டிக் பாண்டியா 87 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சர்மில் அதிகபட்சமாக ஷாஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளை சேர்த்தார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 03, 2023 • 06:14 PM

அதைத்தொடர்ந்து சேசிங் செய்ய வந்த பாகிஸ்தானை பேட்டிங் செய்ய விடாமல் கொட்டி தீர்த்த மழை போட்டியை ரத்து செய்தது. முன்னதாக ஒரு காலத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளில் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் அடித்துக் கொள்ளாத குறையாக மோதிக் கொள்வார்கள் என்பதால் அனல் பறக்கும். ஆனால் எல்லை பிரச்சனையால் இருதரப்பு தொடர்களில் மோதுவதை நிறுத்திய 2012க்குப்பின் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் அதிகமாக நட்பு பாராட்டி வருகிறார்கள். அதில் தவறில்லை என்றாலும் 2017 சாம்பியன்ஸ் கோப்பை, 2021 டி20 உலக கோப்பை லீக் போன்ற போட்டிகளில் பாகிஸ்தானிடம் அவமான படுதோல்வியை சந்தித்த பின் இறுதியாக அந்நாட்டு வீரர்களிடம் விராட் கோலி போன்றவர்கள் சிரித்த முகத்துடன் கை கொடுத்து கட்டி பிடித்து நட்பு பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டதும் பாபர் ஆசாம், ஷதாப் கான் போன்ற பாகிஸ்தான் வீரர்களின் அருகே சென்ற விராட் கோலி அவர்களில் ஒருவராக நின்று கை கொடுத்து சிரித்த முகத்துடன் நட்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இவ்வாறு செயல்படுவதால் முதன்மையான போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை பரம எதிரியாக கருதி சிறப்பாக செயல்படும் உத்வேகம் இந்திய வீரர்களுக்கு இல்லாமல் போவதாக கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “தேசிய அணிக்காக நீங்கள் விளையாடும் போது உங்களுடைய நட்பை பவுண்டரிக்கு வெளியே வைத்து விட்டு களமிறங்க வேண்டும். குறிப்பாக எதிரிக்கு எதிராக போட்டியிடும் போது நட்பை வெளியே வைக்க வேண்டும். இரு அணி வீரர்களின் கண்ணிலும் ஆக்ரோஷம் தெரிய வேண்டும். அந்த 6 – 7 வருடங்களில் நீங்கள் முடிந்தளவுக்கு நட்பாக இருக்கலாம். ஆனால் அந்த நேரங்கள் தான் மிகவும் முக்கியமாகும். ஏனெனில் நீங்கள் உங்களுடைய நாட்டை மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்காகவும் விளையாடுகிறீர்கள்.

ஆனால் இப்போதெல்லாம் எதிரணிகளைச் சேர்ந்த வீரர்கள் கை கொடுத்துக் கொள்கிறார்கள். இதை சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் பார்க்க முடியாது. குறிப்பாக நட்பு ரீதியான போட்டிகளை பார்க்கிறார்கள். நானும் கம்ரான் அஃமலும் நல்ல நண்பர்கள். சமீபத்தில் ஒரு மணி நேரமாக பேசினோம். மேலும் ஒருமுறை அவர் கொடுத்த பேட்டை பயன்படுத்தி நான் ஒரு போட்டி முழுவதும் விளையாடினேன்.

இருப்பினும் போட்டியில் நீங்கள் ஸ்லெட்ஜிங் செய்து கொள்ளலாம். அது உங்களுடைய தன்னிச்சையானதாக இருக்கக் கூடாது. மேலும் லிமிடிற்குள் இருக்க வேண்டும். அத்துடன் உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை இழுக்கக்கூடாது. அதை பின்பற்றியே ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிரான போட்டிகள் அப்போதெல்லாம் பரபரப்பு இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports